Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தியாகத்தின் நிழலில் மலர்ந்த சுதந்திரம் – சுதந்திர தின தமிழ் கவிதை - கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
Kavignar Vijayanethran

தியாகத்தின் நிழலில் மலர்ந்த சுதந்திரம் – சுதந்திர தின தமிழ் கவிதை - கவிஞர் விஜயநேத்ரன்


இப்படித்தான்...

தினமும், ஏதோ ஒரு குழந்தை

தன் தந்தையையும் — பாதுகாப்பையும் இழக்கிறது...


இப்படித்தான்...

தினமும், ஏதோ ஒரு பெண்

தன் கணவனையும் — எதிர்காலத்தையும் இழக்கிறாள்...


இப்படித்தான்...

தினமும், ஏதோ ஒரு தாய்

தன் மகனையும் — நம்பிக்கையையும் இழக்கிறாள்...


இப்படித்தான்...

தினமும், ஏதோ ஒரு நண்பன்

தன் நண்பனையும் — தன் தோளையும் இழக்கிறான்...


இப்படித்தான்...

தினமும், ஏதோ ஒரு குடும்பம்

தன் முழு உலகத்தையும் இழக்கிறது...


அந்த இழப்புகளின் மேல் நம்மை சுமந்து,

நாம் நடக்கிறோம் சுதந்திரமாய்...


அந்த தியாகங்களின் நிழலில் தான்,

நாம் மூடுகிறோம் கண்களை — நிம்மதியாய்...


பனியில் உறைவதும்,

வெயிலில் கரைவதும்,

காட்டில் தொலைவதும்,

புயலில் மறைவதும்,

இன்னுயிரை துறப்பதும் —

எல்லாமும் நமக்காகத்தான்...

நாம் சுதந்திரமாய் வாழ்வதற்காகத்தான்...


அவர்கள் புதைந்த மண்மேல் தான்,

நாம் விதைக்கிறோம் வெற்றிச் சின்னங்களை...


நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றில்,

அவர்களின் ரத்தத் துளிகள் கலந்திருக்கலாம்...


மூச்சை முகரும் போதெல்லாம்,

முடிவு எடுப்போம் இனி —

பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்போம்...

நல்வழியில்... நன்முறையில்...


ஜெய் ஹிந்த்!


சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்,

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மரத்துப் போனதோ? மரித்துப் போனதோ? - நீளும் நீட் மரணங்கள்

Copied!

தவறு சட்டத்தில் இல்லை; அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான்- என்னங்க சார் உங்க சட்டம்

கவிஞர் விஜயநேத்ரன்

ஏட்டில் உள்ள சமத்துவம் எண்ணத்தில் எப்போது வரும் : ஜெய் பீம் - ஒரு மனித சுயபரிசோதனை

கவிஞர் விஜயநேத்ரன்

உள்ளத்தால் வாழ்வோம் : உனக்கும் கீழே உள்ளவர் கோடி

கவிஞர் விஜயநேத்ரன்

நவராத்திரி : பேரரக்க மனதழித்து பெண்மையைப் போற்றுவோம்!!!!

கவிஞர் விஜயநேத்ரன்

சமூகநீதி போதித்த சாதனையாளர் : தந்தைப் பெரியார் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்