Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பாலின சமத்துவம் பார் போற்றும் மகத்துவம் - கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
Kavignar Vijayanethran


பாலின சமத்துவம் பார் போற்றும் மகத்துவம்  ✍️ கவிஞர் விஜயநேத்ரன் 


ஆணாகப்  பெண்ணாக அவதரித்தோம் - சிலர் 

அர்த்தநாரி என்றிங்கும் உருவெடுத்தோம்....


ஆணவனை உயர்வாகச் சித்தரித்தோம் - இந்த 

அகிலத்தை அவனடியில் படையலிட்டோம் 


பெண்ணவளைப் பேதையென்று சிறையிலிட்டோம்  - அவள் 

பெருமையினைக் காலடியில் புதைத்து வைத்தோம்.


பள்ளிக்குச் செல்வதற்குத் தடைகளிட்டோம் - அந்தப்

பாதையைத் தடுப்பதற்கு நெருப்பிலிட்டோம் 


அடுப்பங்கரைத் தாழ்வாரம் எல்லையென்றோம் - அவள் 

விருப்பங்களைத்  தடுப்பதையே 

கொள்கையென்றோம்


படி தாண்டிச் சென்றாலேப் பாவமென்றோம் - அந்தப்

பழைமையை உடைப்பதையே அவமானமென்றோம்


திருமணமே பெண் வாழ்வின் உச்சமென்றோம் - அதிலும் 

மறுமணத்தை ஏனோ நாம் துச்சமென்றோம்..


இப்படியேப் பேசியிங்கு  கூச்சலிட்டோம் - இறுதியாக 

ஆறறிவை எப்படியோ உணர்ந்து கொண்டோம்.


அரசமைப்புச் சட்டமொன்றை எழுதி வைத்தோம் - அதில்

அனைவரும் சமமென்று எடுத்துரைத்தோம்


வேலைக்கு ஊதியத்தை நிர்ணயித்தோம் - அதிலும்

பாலின வேறுபாட்டைக் களையெடுத்தோம்  


சொத்துரிமைச் சட்டமதை திருத்தம் செய்தோம் - அதில் 

சொந்த மகளுக்கும் சமமான பங்கு என்றோம் 


உள்ளாட்சித்  தேர்தலிலும் நிற்க வைத்தோம் - அங்கு 

முப்பத்து மூன்று சதம் பங்கு வைத்தோம்.


கல்வி  முதல் வேலை வரை வாய்ப்பளித்தோம் - பெருங் 

கனவுகளை வென்றெடுக்க வழியமைத்தோம் 


சாதிக்கத் துடிப்பவர்க்குக் களம் கொடுப்போம் - நல் 

சாதனைகள் புரிவதற்குக் கரம் கொடுப்போம்.


சமத்துவத்தை முழுமனதாய் முன்னெடுப்போம் - உண்மை 

மகத்துவத்தை உணர்ந்திங்கு முடிவெடுப்போம்...


ஆளுக்குப்  பாதியென்று  அளவெடுத்துக் கொடுத்துவிட்டால் - இந்தப்

பாருக்குள் வந்திடுமா

பாகுபாடில்லா சமத்துவம்தான்..


வேருக்கு நீரைவிட்டால்  

விருட்சம் தான் துளிர்த்திடுமே - கொடும்

வேற்றுமையைக் களையெடுத்தால்  விண்ணோக்கி வளர்ந்திடுமே..


அடுத்தவர் எண்ணத்திற்கு

ஆள்மனதால் மதிப்பளிப்போம் - இந்த

அழகிய பயணத்திற்கு

அனைவருக்கும் சமவாய்ப்பளிப்போம்...


வாழ்த்துகளுடன் ,

கவிஞர் விஜயநேத்ரன் 



Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கவி(தை)யின் பயணம் - கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

அதிசயங்கள் வியக்கும் அதிசயம் - தாய்மை

கவிஞர் விஜயநேத்ரன்

நலம் பேணும் நாயகிகள் - செவிலியர்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

மனிதம் போற்றும் மனதிற்கு பிறந்தநாள் -கேப்டன் விஜயகாந்த் : பிறந்தநாள் பகிர்வு

கவிஞர் விஜயநேத்ரன்

வெற்றியின் வேர்களைத் தோல்வியில் கண்டறியுங்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

ஏம்மா - கவிஞர் புதியவன் வாழ்வின் வலி பேசும் புத்தகம்