Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

காதல் பிறக்கும் நேரம் - கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
Kavignar Vijayanethran

காதல் பிறக்கும் நேரம்  ✍️ கவிஞர் விஜயநேத்ரன் 

அன்றாட நிகழ்வினில் — அதுவொரு அதிசயம்...

என்றேனும் நடந்திடும் — எதிர்பாரா அனுபவம்...

மொட்டுகள் பூவாகும் — முகமறியா இரகசியம்....


இளம்பரிதி வெளிச்சத்தில் — முழுமதியாய்த் தேயும்....

இதயத்தின் ஓட்டத்தில் — வேகங்கள் கூடும்...


வாளேந்தும் வீரன் கூட — தாழ் பார்க்க நேரும்...

வாயாடிப் பெண்ணவளும் — வாய்மூடத் தோணும்....


வார்த்தைகள் விடுமுறையில் — வாராமல் போகும்...

நாவதிலே நர்த்தனங்கள் — தாண்டவங்கள் ஆடும்....


சொல்லாத வார்த்தையதை — சொல்லிடவே தோன்றும்...

சொல்லவந்த நேரமது — இழுபறியில்  நீளும்...

சொல்லும் அந்த நொடி — சாவதனை வெல்லும்..


சொல்கின்ற அந்த நொடி  வானிலையை மாற்றும்...

சொல்லிவிட்டு காத்திருக்க இடி முழக்கம் தோன்றும்.


உள்ளத்தில் புதியதொரு மாற்றங்கள் பிறக்கும் 

உள்ளுக்குள்  புதியவராய்  பிறந்தவராய்த் தோன்றும்...

ஆம்...

காதலினால் புதியவராய் — பிறக்கின்ற நேரம்.....

அது....

காதலென்னும் கைக்குழந்தை பிரசவிக்கும் நேரம்....

✍️ கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

உழவுக்குத் துணைநிற்போம் உழவர்க்குத் தோள் கொடுப்போம் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

அன்பென்னும் ஆலமரம்

கவிஞர் விஜயநேத்ரன்

இதயம் : வெற்றுச் சதையா?? பற்றின் விதையா??

கவிஞர் விஜயநேத்ரன்

மகளென்னும் தேவதைகள் : தந்தைக்குத் தாயாகும் மகள்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

காற்றின் திசையில் கரையும் கால்முளைத்த நினைவுகள்

கவிஞர் விஜயநேத்ரன்

புரியாத புதிர் : மரணமென்னும் முற்றுப்புள்ளி