விழிகளின் புன்னகை - கவிஞர் விஜயநேத்ரன்
புன்னகைக்கிறேன்.....
ஒவ்வொரு முறையும்...
வாழ்க்கை கற்றுத் தந்த
பாடங்களால்....
கடினமாகத்தான் இருந்தது...
கடந்து வர ஒவ்வொரு முறையும்...
வலிகள் என் வாடிக்கையானதால்...
தினசரி அழுதேன்...
திருடனாய் அழுதேன்...
தனிமையில் அழுதேன்....
தலையணை நனைத்தேன்...
கண்ணீரென்ன கடலா??
வற்றிப் போய்விட்டது...
வாழ்க்கையோட்டத்தில்....
வார்த்தைகள் சொல்லிட முடியுமோ?
வலிகளின் ரணத்தை....
கண்ணீரில் கடந்திட முடியுமோ?
வலிதரும் பயணத்தை...
அதனால் புன்னகைத்தேன்....
அதனாலேயே புன்னகைத்தேன்....
வாடிக்கை வாழ்க்கையின்
வேடிக்கை வலிகளை....
இதயத்தில் புதைத்து
இதழ்களில் மறைத்து....
விசும்பல் சத்தமில்லாமல்...
விழி நீர் யுத்தமில்லாமல்...
புன்னகைக்கிறேன் நானும்....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்