Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

யாதுமானவள்

Copied!
Kavignar Vijayanethran

#அம்மா....


நாம்

கேட்பதை மட்டுமல்ல...

கேளாதவற்றையும் 

கொடுக்கும்  "WIZARD"...


நம்

தேவைகளையெல்லாம் 

தேடியலைந்து தரும்

நவீன "GOOGLE" ...


நம் 

அடி வயிற்றுப் பசியையும்,

ஆழ்மனதின் எண்ணத்தையும்

கண்டறியும் "ULTRA SCANNER" 

 

நம் 

நேரப் பயன்பாடுகளை 

நேர்த்தியாய்  நிர்ணயிக்கும்

நிகரில்லா "REMINDER" 


நமக்குப் 

பிடித்தவற்றையும்

பிடிக்காதவற்றையும்

தெரிந்திருக்கும் "INTERNET"


நம்

அலைபேசி வாழ்க்கையில்

அழகாய் ஜொலித்திட

சக்தியளிக்கும் "MOBILE BATTERY"


நாம் ஓடும் தூரம் வரை 

உயிர் தருவாள்....

தினமும்..


நாம் ஓடுவதற்காகவே

உயிர்த்திடுவாள்...

தினமும்...


ஆம்....


அவளின்றி  அசைவதில்லை...

ஓரணுவும்.....


அணுவெல்லாம் 

அவளாய் இருப்பதால்.....


அணு அணுவாய்

அவள் இருப்பதால்....


அம்மா...


கருவில் சுமந்து உருவம் கொடுத்து 

மெழுகாய்க் கரைந்து  அழகாய் ஒளிர்ந்து 

பிள்ளைகள் வாழ்வு வளர்ந்திட 

தேய்பிறையாய் தினம் தேயும் 

உள்ளத்தில் தாய்மை கொண்ட 

உன்னத அன்னையர் அனைவருக்கும் #அன்னையர்_தின_வாழ்த்துகள் 


வாழ்த்துகளுடன் 

உங்கள் 

✍️ கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

இரசித்திடுவோம் இந்த நொடிதனை...

இலக்கை நோக்கிச் செல்லுங்கள்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

தாயுமானவன் - ஒளி தரும் கதிரவனும், கதிரவனின் கதிரொளியும்

கவிஞர் விஜயநேத்ரன்

உறவுகள் ஒரு தொடர்கதை - ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

கவிஞர் விஜயநேத்ரன்

இலக்கை நோக்கிச் செல்லுங்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

இரசித்திடுவோம் இந்த நொடிதனை...

கவிஞர் விஜயநேத்ரன்

தொலைதூரக் காதல் : அசலைப் பிரதிபலிக்கும் பிரதிகள் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்