வெள்ளை (உணவு) எனும் மாயை - கவிஞர் விஜயநேத்ரன்
வெள்ளையெனும் மாயையில்
வீழ்ந்து விட்டோம்...
உடம்பின் நிறத்தில் மட்டுமல்ல....
உணவின் நிறத்திலும்....
கருப்பட்டி மறந்தோம் - பனங்
கற்கண்டை மறந்தோம்...
வெள்ளைச் சீனியதனில்
உள்ளத்தைத் தொலைத்தோம்....
கம்பரைத்த கூழும்
கேப்பை வடித்த களியும்,
கேட்பாரற்றுப் போனதால்,
தொப்பையும் தொந்தியும்
ஆட்கொணர்ந்து நிற்கிறது...
பனக்கிழங்கைப் பார்த்தால்
"சீ" என திரும்பிக் கொண்டோம்...
பதனீரையும் இளநீரையும்
பருகிடவே மறந்து போனோம்...
பர்க்கருக்கும் பீட்சா விற்கும்
"ஆ" என வாய் திறந்தோம்...
பாட்டில் குளிர்பானமதைப்
பருகுவதே உயர்வென்றோம்...
துரித உணவினைத் தேடி
தினமும் சென்றதால்,
அரிதாய் மாறிப் போனது....
ஆரோக்கியம் உடலில்...
முழுதாய் மாறாவிட்டாலும்
முயன்ற வரை மாறிடுவோம்....
அமுதாய்க் கிடைப்பவற்றை
அனுதினமும் அனுபவிப்போம்..
மண்சார்ந்த உணவுகளை
மகிழ்வுடனே உண்டிடுவோம்....
இனியேனும் விழித்திடுவோம்!!!
இயற்கைக்கு மாறிடுவோம்.!!!
வாழ்த்துக்களுடன்
✍️கவிஞர் விஜயநேத்ரன்