தோழமையென்னும் தூதுவன் - கவிஞர் விஜயநேத்ரன்
வாழ்வென்னும் நிலவதனில்,
வளர்பிறையோ? தேய்பிறையோ?..
தோள் தரும் உறவொன்று,
துணை நின்றால் போதாதா??
வீழ்கின்ற நிலைவரினும் - நம்மை
வீழ்த்தாத உறவெதுவோ??
மால்கின்ற நிலையதிலும் - நம்
மானம் காக்கின்ற உறவெதுவோ??
எதிர்நின்று ஆயிரம் பேராயிரம்
எள்ளி நகையாட - நமக்காக
துணைநின்று தோள் கொடுக்கும்
வரம் பெற்ற ஓர் உறவே....
தரம் தாழ்கின்ற போதெல்லாம்
பகவத் கீதை சொல்லும்...
தடம் பிறழ்கின்ற போதெல்லாம்
புதிய பாதை காட்டும்...
சேர்கின்ற இடமதிலே - நம்மை
ஆள்கின்ற உறவதுவே....
சிந்தையில் தெளிவு கொண்ட
சீரான நட்பென்னும் தோழமையே....
வாழ்த்துகளுடன்,
✍️கவிஞர் விஜயநேத்ரன்