முழுமையாகும் வெற்றிடங்கள் - கவிஞர் விஜயநேத்ரன்
'இல்லை' என்பது மட்டுமே
நிரம்பி இருக்கிறது.....
என் வெற்றுப் பக்கங்களில்...
முழுமையாய்....
கண்ணயர்ந்து விட்டன...
கனவின் நிழல்கள் கூட...
இல்லையென்ற வெறுமையின்
இடைவிடா இடைவெளியில்....
நிற்காத நினைவுகளெல்லாம்
ஆழ்மனதிற்குள் ஆர்ப்பரித்து
அழுது கொண்டிருக்கிறது...
நிசப்தமாய் மாறிய சுவாசங்கள்,
நித்திரையைப் பலியிட்டு,
நீரிரைக்கிறது விழிகளின் ஓரங்களில்..
படையெடுத்து வந்து,
வலுவிழந்து நிற்கின்றன...
வரமறுக்கும் வார்த்தைகள்...
கரைகின்ற மௌனங்களுக்குள்..
கரையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்...
வெளிச்சமில்லா கருவறைக்குள்....
மீண்டும் ஒரு பிறப்பை...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்